புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-எட்டயபுரம் அருகே திருமணம் முடிந்து ஊர் திரும்பிய 2 அடி உயர ஜோடிக்கு கிராமமே திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தது.


எட்டயபுரம் அருகே உள்ள என்.வேடபட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துப்பாண்டி (32). 2 அடி உயரம் உடைய இவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் முத்துலட்சுமி (27), 10வது வரை படித்துள்ள இவரும் சுமார் 2 அடி உயரம் உடையவர்தான். இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடந்தது. இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் அயன்வடமலாபுரத்தில் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

திருமணம் குறித்து மணமக்கள் கூறுகையில், எங்களை போன்று உயரம் குறைவான மாற்று திறனாளிகளுக்கு திருமணம் என்பது அரிதான ஒன்று. நாங்கள் உயரம் குறைவாக இருந்தாலும் எங்களுடைய மனசு எல்லோரும் போல விசாலமானது. இந்த கிராம மக்கள் கொடுத்த வரவேற்பு எங்களுக்கு வெற்றிகரமாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதோடு அரசு எங்களுக்கு ஏதாவது வேலை கொடுத்து உதவ வேண்டும் என்று மணமக்கள் தெரிவித்தனர்.


 
Top