இந்தியா-நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு பக்கமுள்ள நடுவக்குளத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அருகே உள்ள மீனவன்குளம் கிராத்தின் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இப்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்றுவிடவே கடந்த வெள்ளிக்கிழமை காலை மாணவி தனியாக இருப்பதை பயன்படுத்தி பாணான்குளத்தைச் சார்ந்த மாரிமுத்து, மணிகண்டன் இரண்டு வாலிபர்கள் திடீரென நுழைந்து கத்தியைக்காட்டி பயமுறுத்தி பலாத்காரம் செய்தனராம், மேலும் கத்தியால் தாக்கப்பட்டதில் மாணவி காயமடைந்தார்.
இதனையடுத்து மாணவி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து மாணவியின் தந்தை களக்காடு போலீசில் புகார் செய்யவே வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான மாரிமுத்துவையும், மணிகண்டனையும் தேடி வருகின்றனர்