புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர்.

கிழக்கு சஸெக்ஸிலுள்ள பிறைட்டன் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களான நிக் கன்ட் மற்றும் தன்யாடீன் ஆகியோரே இந்த தாய்ப்பாலைப் பயன்படுத்தி பாதணிகளை உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் தாய்ப்பாலிலுள்ள புரதத்தை கடினமான பிளாஸ்டிக் வகையாக மாற்றி இந்த சின்னஞ் சிறிய பாதணிகளை வடிவமைத்துள்ளனர்.

அளவில் மிகவும் சிறிய இந்த பாதணிகளை அணிய முடியாது.

உலக தாய்ப்பால் தான தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டதையொட்டி பெண்ணொருவரால் தானமாக வழங்கப்பட்ட தாய்ப்பாலைப் பயன்படுத்தியே இந்த பாதணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பிரித்தானிய வடிவமைப்பாளர்களால் தாய்ப்பாலில் ஐஸ்கிறீம் மற்றும் தாய்ப்பாலில் ஆபரணங்கள் என்பன தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







 
Top