குறைப் பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த போலந்து நாட்டு போதை பெண்ணுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலந்து நாட்டில் உள்ள டோமஸ்ஜோ நகரின் மதுக்கடையில் மது வாங்கச் சென்ற 24 வயது கர்ப்பிணி பெண், போதையில் தள்ளாடி மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை முறையில் பிரசவம் நடைபெற்றது. 2 வார குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு, சராசரி அளவைக் கடந்து 4.5 கிராமாக இருந்தது.
இதனால், குழந்தையின் இதயத் துடிப்பு மிகவும் குறைவாக இருந்தது. சுவாசம் மற்றும் ரத்த சுழற்சியிலும் குறைபாடு காணப்பட்டதால் குழந்தை உயிருக்குப் போராடியது.
குழந்தையின் தாயின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து பரிசோதித்த போது, போதையில் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஆல்கஹாலின் அளவை விட 23 மடங்கு ஆல்கஹால் அவளது ரத்தத்தில் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் பாதிப்பாகவே குழந்தையின் ரத்தத்திலும் ஆல்கஹாலின் அளவு உயர்ந்து காணப்பட்டதை அறிந்த டொக்டர்கள், போதைப் பழக்கத்தினால் வயிற்றில் வளர்ந்த சிசுவை கொலைச் செய்ய முயன்ற குற்றத்திற்காக அவரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
நீதிமன்றத்தில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். தற்பொழுது தீவிர சிகிச்சை பகுதியில் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்படும் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக டொக்டர்கள் கூறியுள்ளனர்.