பத்திரிக்கையோ, இணைய ஊடகங்களோ கிசுகிசு என்றால் அதை படிக்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். சினிமா உலகில் காதல் என்றால்
மட்டும் அதற்கு ஏன் அத்தனை சுவாரஸ்யம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.
தியாகராஜ பாகவதர் காலத்தில் தொடங்கி தனுஷ் காலம் வரை கிசுகிசுக்களுக்கு கொங்சமும் பஞ்சமில்லை. சில சமயங்களில் இந்த கிசுகிசுக்கள் உண்மையாகியிருக்கிறது. சில புஸ்வானமாகியிருக்கிறது.
இப்போது அதிக அளவில் கிசுகிசுவில் அடிபட்டுக்கொண்டிருப்பவர் நயன்தாராதான். அதேபோல் பிரபுதேவாவும் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் கிசுகிசுக்களில் அடிபடுகிறார்.சினிமா ரசிகர்கள் ரசித்த பிரபல கிசுகிசுக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.
சிம்புவின் காதல்கள்
நடிகர் சிம்பு நடிக்க வந்த புதிதில் இருந்தே கிசுகிசுவுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. திரிஷா தொடங்கி நயன்தாரா வரை அவருடன் கிசுகிசுக்கப்படாத நடிகைகளே இல்லை எனலாம். இப்போது ஹன்சிகாவிற்கும் , சிம்புவிற்கும் லவ் என்பதுதான் லேட்டஸ்ட்
விஷால்
செல்லமே தொடங்கி மத கஜ ராஜா வரை விஷால் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டிருக்கிறார். இப்போது நாட்டாமை நடிகர் மகளுடன் காதல் என்பதுதான் சமீபத்திய கிசுகிசு.
ஆர்யா
காதல் பாய் ஆர்யா என்று கூறும் அளவிற்கு கிசுகிசுவிற்கு பஞ்சமில்லை. எந்த பரபரப்பும் இல்லாவிட்டால் நயன்தாரா உடன் திருமணம் என்று கூறி கிசுகிசு பரப்புவதில் வல்லவர் ஆர்யா.
சூர்யா
ஜோதிகா உடன் கிசுகிசுக்கப்பட்ட சூர்யா கடைசியில் ஜோதிகாவையே திருமணம் செய்து கொண்டார். அதுமுதல் சூர்யாவைப்பற்றி எந்த கிசுகிசு வருவதில்லை.
விஜய்
திருமணத்திற்கு முன்பு சில கிசுகிசுக்கள் உலா வந்தாலும் திரிஷா உடன் நடிக்கும் போது மட்டும் கிசுகிசு இறக்கை கட்டி பறக்கும்.
அஜீத்
காதல் இளவரசன் என்று கூறும் அளவிற்கு ஒருகாலத்தில் கிசுகிசு உலா வந்தது. ஷாலினியை மணந்த பின்னர் இவரைப் பற்றி எந்த கிசுகிசுவும் இல்லை.
பிரபுதோவா
ரம்லத் உடன் காதல் என்று ஆரம்பித்து அவரையே மணந்து கொண்டவர் பிரபுதேவா. பின்னர் நக்மா, நயன்தாரா, ஹன்சிகா, சோனாக்ஷி சின்கா, என கிசுகிசுக்களில் பஞ்சமில்லாமல் அடிபட்டவர். இப்போது அசின் உடன் பிசினாக சுற்றித்திரிகிறார் பிரபுதேவா என்று கிசுகிசுக்கப்படுகிறார்.
கார்த்தி.
தி தமன்னா உடன் காதல், காஜல் அகர்வாலுடன் சரியான கெமிஸ்ட்ரி என்று கிசுகிசுக்கப்பட்டவர் கார்த்தி. திருமணத்திற்குப் பின்னர் கிசுகிசு வலையில் சிக்காமல் தப்பித்து வருகிறார்.
தனுஷ்
துள்ளுவதோ இளமையில் தொடங்கி ராஞ்சனா இந்திப்படம் வரை பக்கத்து வீட்டுப் பையன் கெட் அப்பில்தான் வருகிறார் தனுஷ். அதுதான் உடன் நடிக்கும் நடிகைகளுக்கும் பிடித்துப்போய்விடுகிறது. ஐஸ்வர்யாவை மணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு அப்பா ஆனபின்னரும் நயன்தாரா தொடங்கி சோனம் கபூர்வரை தனுஷ்க்கு கிசுகிசுவிற்கு பஞ்சமில்லை