நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் திருமணம் நடக்கப் போவதாக பத்திரிகை அலுவலகங்களுக்கு சில தினங்களுக்கு முன் திருமண அழைப்பிதழ் வந்தது. ‘ஆர்யா வெட்ஸ் நயன்தாரா’ என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில் ஆர்யா மோதிரம்
அணிவிப்பது போல் படமும் அதில் இடம் பெற்று இருந்தது. இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டன.
இதனால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது ‘ராஜாராணி’ படத்தின் விளம்பரத்துக்கு அது வெளியிடப்பட்டது தெரிய வந்தது. இப்படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக போலி திருமண அழைப்பிதழை ஏ.ஆர்.முருகதாஸ் அரச்சிட்டு வெளியிட்டு இருந்தார்.
நயன்தாரா ஒப்புதலோடு இதை வெளியிட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. போலி திருமண அழைப்பிதழ் விவகாரம் நயன்தாராவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏ.ஆர்.முருகதாசை போனில் தொடர்பு கொண்டு சண்டை போட்டாராம். விழாவில் பங்கேற்காமலும் புறக்கனித்து விட்டார். நயன்தாராவை சமாதான படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.