மக்களைக் அதிகம் கவர்ந்த பெண்களில் முதலிடத்தில் இருக்கும் தமன்னா தான் ஆபாசமாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவில் அதிகம் கற்றுக்கொண்ட நான், முன்பெல்லாம் என் படங்கள் ஓடாமல் போனால் வருத்தப்படுவேன்.
ஆனால் தற்போது அப்படி இல்லாமல், ஒரு படத்தை முடித்தததும் அதை மறந்துவிட்டு அடுத்த படத்திற்கு தயாராகிவிடுகிறேன்.
ஒவ்வொரு படத்திலும் நான் நடித்த காட்சிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். பெரிய கமர்ஷியல் படங்களில் 5, 6 காட்சிகளில் வந்தால் கூட சந்தோஷம் தான்.
தற்போது இந்தியில் நடித்துக் கொண்டிருக்கும், என்னை வளர்த்து விட்டது தென் இந்தியப் படங்கள் தான்.
விருதுகளை நினைத்து படங்களில் நடிப்பது இல்லை. விருது கிடைத்தால் சந்தோஷம் தான். சினிமாவில் போட்டி இருப்பது சகஜம் என்றாலும், பொறாமை இருக்க கூடாது.
என்னை இன்னொரு ஸ்ரீதேவி என்று கூறுவது சந்தோஷமாக இருக்கிறது. ஸ்ரீதேவி சிறந்த நடிகை அவர் மாதிரி யாரும் நடிக்க முடியாது.
ஸ்ரீதேவியுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது பெருமையாக உள்ளது. நான் சம்பளம் அதிகம் கேட்பதாக வதந்தி பரப்புகின்றனர். என் தகுதிக்கு தேவையான பணத்தை தான் வாங்குகிறேன்.
சிக்கன் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். ஐதராபாத் பிரியாணி, மீன் குழம்பு போன்றவற்றை விரும்பி சாப்பிடுவேன்.
தமிழ்நாட்டில் சாம்பார் இட்லி ரொம்ப பிடிக்கும் என்று கூறும் தமன்னா ஆபாசமாக நடிக்கமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்