ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 69-வது லீக் இன்று மாலை 4 மணிக்கு தர்மசாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி
கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணியைச் சேர்ந்த கில்கிறிஸ்ட்- மந்தீப் சிங் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.
கில்கிறிஸ்ட் 5 ரன்னிலும், மந்தீப் சிங் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு அசார் மெக்மூத்- ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இவர்களது விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணி வீரர்கள் திணறினார்கள். சிறப்பாக விளையாடிய மார்ஷ் 63 ரன்களும், அசார் மெக்மூத் 80 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.
அதன்பின் வந்த வோரா 8 பந்தில் 20 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் குவி்த்தது. மும்பை அணி சார்பில் மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது.
ஆனால் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மும்பை அணியினர் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினார். இதனால் மும்பை அணி 19.1 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. கடைசி விக்கெட்டுக்கு தவான் குல்கர்னி களம் இறங்காததால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மும்பை அணியில் ராயுடு அதிகபட்சமாக 26 ரன் எடுத்தார்.