புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொலிவுட்டில் வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு ஆன்மீகத்துக்கு மாறியுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏற்கனவே காதல் சர்ச்சைகளில் பரப்பரப்பாக பேசப்பட்டார். தனுசுடன் மோதல், சக நடிகர்கள் பற்றி தன் படங்களில் வசனம் வைத்து கேலி செய்தல் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார்.

ஆனால் சமீப காலங்களில் சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் தெரிவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

படங்களில் கூட இமேஜ் பார்க்காமல் நடிக்கிறார். பேச்சிலும் மென்மையை கடை பிடிக்கிறார். அத்துடன் ஆன்மீக செயல்பாடுகளிலும் ஈடுபட தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தனக்கு பிடித்த உணவான அசைவத்தை தவிர்த்து, சைவ உணவுகளையே சாப்பிடுகிறாராம்.

நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்துகள் விழாக்களில் கூட பங்கேற்பதை நிறுத்தியுள்ள சிம்பு தனது நண்பர்களுடன் சுற்றுவதையும் குறைத்துக் கொண்டாராம்.

அடிக்கடி தனியாக கண்களை மூடி பத்மாசனத்தில் உட்கார்ந்து தியானம் செய்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
 
Top