புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி நர்ஸ் விடுதிக்குள் அத்துமீறி புகுந்து நிர்வாண நடமாடிய ஆசாமி சிக்கினார். அவரது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்
கீழ்ப்பகுதியில் நர்ஸ் விடுதி உள்ளது.

இந்த விடுதிக்குள் கடந்த சில மாதங்களாக 3 பேர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து நர்ஸ்கள் குளிக்கும் இடங்கள், துணி காய வைக்கும் இடங்களில் அவர்கள் பார்வையில் படும்படியாக உள்ளாடைகளுடன் நின்றும், நிர்வாணமாக நடனமாடியும் தொல்லை கொடுத்து வந்தனர்.

இது குறித்து நர்ஸ்கள் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் கண்காணிக்கும் நேரங்களில் அவர்கள் உஷாராகி வருவதில்லை.

போலீசார் இல்லாத நேரங்களில் வந்து நிர்வாண நடனம் ஆடி வந்தனர். இன்று காலை பைக்கில் வந்த ஒருவர் விடுதியின் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தார். அப்போது சில நர்ஸ்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.

அவரைப் பார்த்து நர்ஸ்கள் கூச்சல் போட்டனர். அவர் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார். உடனே விடுதிக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்ட நர்ஸ்கள், அரசு மருத்துவமனை டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விடுதிக்கு விரைந்து வந்து நிர்வாண ஆசாமியை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த சுடலை (33) என்பது தெரியவந்தது.

அவரது கூட்டாளிகள் 2 பேரும் இதுபோல் விடுதிக்குள் புகுந்து நிர்வாண ஆட்டம் போட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
 
Top