புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நாத்தண்டியவில் இடம்பெற்றுள்ளது.


கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயில் நாத்தண்டிய ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்னரே ரயிலில் இருந்து இறங்க ஒருவர் முயற்சி செய்துள்ளார்.

நேற்று (17ம் திகதி) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த நபர் தவறி ரயில் பாதையில் விழுந்து படுகாயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கு வயது 45 என தெரிவிக்கப்படுகின்ற போதும் அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
 
Top