புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிங்கப்பூரில், மனைவியை கத்தியால் தாக்கி கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி கணவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வசிக்கும் ஜார்ஜ் ராஜ் என்பவரது மனைவி ஷிவானி பிரியதர்ஷினி. வேலையில்லாமல் இருந்த ஜார்ஜ், கடந்த 2011ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் மனைவியின் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் கீறி காயம் ஏற்படுத்தியுள்ளார்.

அது மட்டுமல்லாது மின் விசிறி, பிளாஸ்க் உள்ளிட்ட பொருட்களையும் வீசி எறிந்து மனைவியை தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக பொலிசில் புகார் செய்த ஷிவானி, கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசிக்கிறார். இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம், ஜார்ஜ் ராஜுக்கு ஒன்பது மாத சிறை தண்டனையும், 85 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
 
Top