சிங்கப்பூரில் கள்ளக் காதலனை அடித்துக் கொன்ற இலங்கைத் தமிழ் பெண்
கள்ளக் காதலனான இந்திய பிரஜையை படுகொலை செய்தார் என்கிற வழக்கில் இலங்கைப் பணிப் பெண்ணுக்கு சிங்கப்பூரில் 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இவரின் பெயர் புவனேஸ்வரி தர்மலிங்கம். தற்போது இவருக்கு வயது 34. கணவனும், இரு குழந்தைகளும் நாட்டில் உள்ளனர். 2004 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார்.
32 வயது உடைய முருகையன் செல்வம் என்பவருடன் இவருக்கு 2007 ஆம் ஆண்டு முதல் கள்ள தொடர்பு ஏற்பட்டது.
செல்வத்தின் அலுவலக இடத்தில் 2009 ஆம் ஆண்டி டிசம்பர் 03 ஆம் திகதி இரவு இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.
செல்வத்துக்கு இந்தியாவில் பேச்சுத் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. இதற்கு பணம் தேவைப்பட்டதால் புவனேஸ்வரியின் எஜமானருடைய காசோலைப் புத்தகத்தை தரச் சொல்லி கேட்டு இருக்கின்றார்.
செக்ஸிற்காகவும், பணத்துக்காகவும் செல்வத்தால் சுரண்டப்பட்டு வந்திருக்கின்றார் என்று இத்தருணத்தில் உணர்ந்தார் புவனேஸ்வரி. சண்டை பிடித்தார். அங்கு காணப்பட்ட 5. 6 கிலோ எடை உடைய டம்பெல் என்கிற உடல் பயிற்சி சாதனத்தால் செல்வத்தின் மண்டையில் அடித்தார். செல்வம் இறந்து போனார்.
சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் படுகொலை குற்றத்தை புவனேஸ்வரி சுயம் ஏற்றுக் கொண்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக