புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவிட்சர்லாந்திலுள்ள நெய்ரிவியூ(Neirivue) என்ற ஊரில் கடந்த 2011ம் ஆண்டு வீட்டுரிமையாளர் கடுமையாக வேலை வாங்கியதால் அவரை துப்பாக்கியால் கொன்ற வழக்கில் தற்பொழுது 12 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்தவரின் தரப்பில் வாதாடிய சட்டதரனி, கடுமையான முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்த தன் கட்சிக்காரரை வீட்டிற்கு மிக அதிகமாக வேலை செய்யும்படி கொலையுண்ட வீட்டுரிமையாளர் வற்புறுத்தினார்.

அவ்வாறு தான் கட்டளையிட்ட வேலைகளைச் செய்து தரவில்லை என்றால் தனது வீட்டை காலி செய்ய வேண்டும் என்று படுக்கையறைக்குள் தன் மகனோடு வந்து மிரட்டியிருக்கிறார்.

வலியால் துடித்துக் கொண்டிருந்த தன் கட்சிக்காரர் இந்த மிரட்டலைக் கேட்டதும் ஆத்திரமடைந்து துப்பாக்கியால் சுட்டதினால் வீட்டு உரிமையாளர் இறந்து போகியுள்ளார்.

இத்தவறை எண்ணி தன் கட்சிக்காரர் வருந்துவதாகவும், இறந்தவரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவர் செய்த இந்த கொலைக்காக 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1,60,000 ஃபிராங்க் அபராதமும் விதிக்கப்பட்டது. இவர் கடந்த 1995ம் ஆண்டில் தன் காதலியை அடித்துக் கொன்றதால் ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top