புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கமல்- ஷங்கர் இணைந்த முதல் படம் இந்தியன். இப்படத்தில் கமல் இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்தார். மனீஷாகொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி- செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.


குறிப்பாக கமலின் இந்தியன் தாத்தா கெட்டப் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அதன்பிறகு கமலை வைத்து ஷங்கர் படம் இயக்குவதற்கான சூழல் அமையவில்லை.

இந்த நிலையில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் கமலை வைத்தே ஷங்கர் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதல் பாகத்தில் இரண்டு வேடங்களிலும் கமலே நடித்திருந்தார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் இந்தியன் தாத்தாவாக மட்டுமே கமல் நடிக்கிறாராம். இளமையான கமலாக சூர்யா நடிக்கிறாராம்.

தற்போது ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கர், இதுசம்பந்தமாக கமல், சூர்யாவிடம் பேசி வருகிறாராம்.

கமலின் விஸ்வரூபம்-2 படவேலைகள் முடிந்ததும் இந்தியன்-2 படவேலைகள் தொடங்கும் என்று தெரிகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top