புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டனில் சோமர்செட்டில் உள்ள சார்ட் நகரைச் சேர்ந்த கேத்தரீன் வெல்ஸ் பர்(Catherine Wells-Burr)(23) என்ற இளம்பெண்ணை ராஃபால் நோவாக்(Rafal Nowak)(31) என்பவர் தலையணையால் முகத்தை அழுத்திக் கொன்றுள்ளார்.

பின்னர் அந்தப் பெண்ணின் உடலை காரில் ஏற்றிச் சென்று அருகே ஒரு இடத்தில் தீ வைத்து எரித்துள்ளார். இந்தத் தீ வைப்புக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த அன்னா லக்வினோவிச்(Lagwinowicz) (32) என்பவரும் மற்றும் நோவாக்கின் உறவினர் தடேவ்ஸ் திமித்ரிசின்(Tadevsz Dmytryszyn)என்பவரும் உதவியுள்ளதாக பொலிசார் இம்மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கி விட்டனர்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ரிச்சர்டு ஸ்மித்(Richard Smith) நீதிமன்றத்தில் கூறுகையில், கடந்த செப்டம்பர் மாதம் 11ம் திகதியன்று வழக்கம் போல் கேத்தரீன் தூங்க சென்றுள்ளார். அவருடைய சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக ரஃபால் நோவாக் தலையணையால் கேத்தரீனை அழுத்திக் கொன்றுள்ளார். மற்ற இருவரும் உடனே தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் என்று எடுத்துரைத்தார்.

ஆறு இலக்க பெருந்தொகையை கேத்தரீன் ஆயுள் காப்பீடு செய்துள்ளதால் அந்தப் பணத்தைப் பெறும் முயற்சியில் அவரைக் கொலைச் செய்துள்ளனர் என்று அரசு தரப்பு சட்டதரனி வாதாடியுள்ளார். ஆனால் இந்த மூவரும் தம் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top