புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பார்வையற்றோருக்கு உதவும் விதத்தில், பிரைய்லி முறையைப் பயன்படுத்தி, ஒரு ஸ்மார்ட்போன், இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில்,
புதிய கண்டுபிடிப்புகளுக்கென இயங்கிவரும் பல சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளன. அதில்தான் சுமித் தாகரின் நிறுவனமும் நடந்துவருகின்றது.

தொழில்நுட்ப வடிவமைப்புப் படிப்பில் முதுநிலைப்பட்டம் பெற்றுள்ள தாகர், டெல்லி தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இந்தப் புதிய போனை வடிவமைத்துள்ளார். தற்போது சோதனை முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த போன், வெற்றி பெற்றால், பார்வையற்றோருக்கு இது பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று தாகர் குறிப்பிட்டார்.

மூன்று வருடங்களுக்கு முன்னால், இந்த முயற்சியைத் தொடக்கிய தாபரின் நிறுவனமான கிரியேட் டிசைன் சொல்யுஷனில், ஆறு பேர் பணிபுரிகின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து, ஐந்து இளம் திறமையாளர்களை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுத்து அவர்களின் தொழில்முறை கண்டுபிடிப்புகளுக்கு நிதி உதவி அளிக்கும் ரோலெக்ஸ் அவார்ட்ஸ் நிறுவனம், இவர்களுக்கு உதவி புரிவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top