
நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கடந்த 2 ஆண்டுகளாக இயக்கி வந்தார் சசி. அதற்கு என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார் பரத். ஒவ்வொரு கெட்டப்புக்கும் அவரை தயார்படுத்த மாதக்கணக்கில் ஆனது. மேலும், முதன்முறையாக இந்த படத்தில் நான் ஆக்சன் கதையை கையிலெடுத்திருக்கிறேன். இது ஒரு மாறுதலுக்காக மட்டுமின்றி, என்னால் ஆக்சன் படமும் எடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் முயற்சியே என்கிறார் சசி.
மேலும், இந்த படத்தில் ஒரு சாவு பாடலும் உண்டு. அதை வெஸ்டர்ன் பாணியில் கம்போஸ் செய்திருக்கிறோம். இப்போது பார்ப்பவர்களுக்கு இந்த மாதிரி சாவு பாட்டெல்லாம் எதற்கு என்றுதான் தோன்றும். ஆனால் படத்தை பார்க்கும்போது அப்படியொரு பாடல் அவசியம் தேவை என்பது புரியும். மற்றபடி இதில் சென்டிமென்டெல்லாம் எதுவும் இல்லை என்கிறார் சசி.
0 கருத்து:
கருத்துரையிடுக