புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவிலுள்ள ஒண்டேரியோ மாநிலத்தின் வடபகுதியில் வாழ்ந்து வருகின்ற நெஸ்கந்தகா(Neskantaga) என்ற ஆதிவாசிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பதால் அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு இளைஞர்கள் அடுத்தடுத்துத் தற்கொலை செய்து கொண்டனர். இந்த இனத்தில் தற்பொழுது வெறும் முந்நூறு பேர் மட்டுமே இருக்கின்றனர். இதுவும் திடீர் தற்கொலையால் குறைந்து கொண்டே போவதை மக்கள் விரும்பவில்லை.

இது குறித்து நெஸ்கந்தகா இனத்தின் தலைவரான பீட்டர் மூனியாஸ்(Peter Moonias) கூறுகையில், முதலில் முப்பது வயதினர் ஒருவரும், அதைத் தொடர்ந்து தொற்று நோய் போன்று 19 வயதினர் ஒருவரும் தற்கொலையால் மாரணமடைந்தது தம் இனத்து மக்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற துர்மரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் கூடிப் பேசும் முறையை விலக்க நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தேசிய சராசரியை விட இந்த இனத்துத் தற்கொலை சராசரி அதிகமாகயிருப்பது கவலையளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஒண்டேரியோ அரசின் நெருக்கடி நிலை மேலாண்மை அலுவலகத்தாரும், செஞ்சிலுவைச் சங்கத்தாரும் ஆதிவாசி மக்களுக்கு ஆலோசனை வழங்கி உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தனிமை, போதைப் பழக்கம், மதுப்பழக்கம், ஏழ்மை, குடியிருக்க வீடு இல்லாதது, பண்பாட்டு முக்கியத்துவம் தரப்படாதது போன்றவையே இந்த இன இளைஞர்கள் தற்கொலைச் செய்து கெள்ள துணிந்ததற்கு முக்கிய காரணங்களாகும் என்று கருதப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top