புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகிலேயே முதல் முறையாக கர்ப்பப் பை மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்த பெண், அது முடிந்து 2 ஆண்டுகள் கழித்து தற்போது அப்பெண்

கர்ப்பமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு பெண் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள் என கூறப்பட்டு வரும் அதேவேளை, அறிவியல் உலகமோ 5000ல் ஒரு பெண் பிறவியிலேயே கர்ப்பப்பை இன்றி பிறக்கிறாள் எனக் கூறுகிறது.

ஒரு மரணமடைந்த பெண்ணின் கர்ப்பப் பையை எடுத்து கர்ப்பப்பை இல்லாத தெர்யா சேர்த் என்ற அந்த 22 வயதுப் பெண்ணுக்கு பொருத்தினர் டாக்டர்கள். தற்போது அந்தக் கர்ப்பப் பை மூலம் அப்பெண் தாய்மையடைந்துள்ளார்.தெர்யாவுக்கு பிறவியிலேயே கர்ப்பப் பை கிடையாது. இதனால் அவர் அடைந்த மன வேதனைக்கு அளவே இல்லை. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இறந்த பெண் ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட கர்ப்பப் பை பொருத்தப்பட்டது.

ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்தது. அதன் பின்னர் அவர் சோதனைக் குழாய் மூலம் குழந்தைப் பேறுக்காக முயற்சித்து வந்தார். தற்போது அதில் வெற்றி கிடைத்துள்ளது.

தெர்யா நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும், அவருக்கு சோதனைக் குழாய் கருத்தரிப்பு நடவடிக்கை வெற்றியில் முடிந்துள்ளதாகவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெர்யாவின் டாக்டரான முஸ்தபா உனால் கூறுகையில், தெர்யா நல்ல நலமுடன் உள்ளார். குழந்தைப் பேறை எதிர்நோக்கியுள்ளார்.தாய்மையின் தொடக்க நிலையில் அவர் இருக்கிறார். எல்லாம் நல்லபடியாக முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

கடந்த 2000மாவது ஆண்டில் சவூதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கர்ப்பப் பை மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனால் 90 நாட்களில் அதை எடுக்க நேரிட்டது. இந்த நிலையில் தெர்யாதான் உலகிலேயே முதன் முதலில் வெற்றிகரமாக கர்ப்பப் பை பொருத்தப்பட்ட பெண் என்ற பெயரைப் பெற்றார்.

தெர்யாவின் கணவர் பெயர் முஸ்தபா சேர்த். இவருக்கு வயது 35 ஆகிறது. கணவரும், மனைவியும் தற்போது தங்களது முதல் செல்லத்தை எதிர்பார்த்து ஆவலோடும், பதைபதைப்போடும் காத்துள்ளனர்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top