தமிழகத்தில் தென்னை மரம் ஏறுபவர்களுக்கு குறைந்தபட்ச கூலி மரத்துக்கு இரண்டு ரூபாய் பத்து காசுகள் அல்லது குறைந்தபட்ச தினக்கூலி 126 ரூபாய் என்று தமிழக அரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை பரிந்துரைத்துள்ளது.
ஆயிரம் தேங்காய்களை மட்டை உரிக்க 150 ரூபாய் கூலி என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் புதிய ஊதிய அளவுகளை சேர்க்கும் வகையில் ஒவ்வொரு தொழில்துறைக்கும் மாநில அரசுகள் குறைந்தபட்ச ஊதியத்தை அவ்வப்போது நிர்ணயித்து வரவேண்டும்.
அந்த அடிப்படையில் தேங்காய் பறித்தல் தொழிலுக்கு தமிழக அரசு தற்போது நிர்ணயித்துள்ள கூலி அளவுகள் இவை.
இந்த புதிய கூலிகள் இன்னும் இரண்டு மாத காலத்தில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மரமேறும் தொழில் செய்வோருக்கு நடைமுறையில் உள்ள கூலிகளின் அளவுக்கு எவ்வகையிலும் பொருந்தாமல் மிகவும் குறைவான கூலிகள் அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மரமேறும் தொழிலாளிகளும், தோப்பு உரிமையாளர்களும், ஆர்வலர்களும் விமர்சிக்கின்றனர்.
“அரசுக்கு யதார்த்தம் புரியவில்லை”
மரமேறும் தொழிலுக்கு தமிழக அரசு நிர்ணயித்துள்ள இந்த கூலி அளவுகள் பற்றி தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியைத் கருத்து தெரிவிக்கையில்,
தொழிலின் யதார்த்தங்களில் இருந்து அரசும் அதிகாரிகளும் எந்த அளவுக்கு விலகியிருக்கிறார்கள் என்பதை இந்த குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் காட்டுவதாத் தெரிவித்தார்.
மரத்துக்கு 12 ரூபாய்க்கு குறைவாக மரம் ஏறிகளுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்பதே இன்றைய கள நிலவரம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல மட்டை உரிக்க தேங்காய்க்கு 45 காசுகள் கூலி கொடுக்கப்பட்டுவருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு வேலைவாய்ப்புத் திட்டங்களில் வேலை எதுவும் செய்யாமலேயே மக்கள் ஊதியம் பெற முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டு, விவசாயத் தொழில்துறையில் இவ்வளவு குறைவான ஊதியங்களை அரசு நிர்ணயித்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இத்தொழில்துறை முற்றிலும் முடங்கிப்போகும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
nalla thiddam
பதிலளிநீக்கு