Water babies என்று அழைக்கப்படும் இரண்டே வயதான இரட்டையர்கள் தமது அசாத்திய நீச்சல் திறமையால் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள். William மற்றும் Ellenita Trykush ஆகிய இரு குழந்தைகளும் தமது ஒன்பதாவது மாதத்தில் இருந்தே நீச்சல் பயிற்சி பெற்றவர்கள். இவர்களின் பெற்றோர் தான் பயிற்சிவிப்பாளர்கள்.
நீச்சலில் அதிக ஆர்வம் காட்டும் இக்குழந்தைகளுக்கு இப்போது இரண்டு வயதாகிறது. மூச்சை பிடித்தபடி கைகளையும் கால்களையும் ஆட்டி இவர்கள் நீந்தும் அழகை பிடிக்காதவர்கள் யாருமில்லை.
இவர்களின் பிறப்புப் சுவாரசியமானது, பிரசவ திகதிக்கு ஆறு வாரங்களுக்கு முன்னமே இருவரும் பிறந்திருந்தனர். குறைப்பிரசவம் எப்படி வளருகிறது பாருங்கள், அதுமட்டுமல்லாமல் 2028ஆம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவும் இப்போதே பெற்றோரால் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக