அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தின் கிரீன்ஸ் பியர் என்ற கிராமத்தில் வசித்து வரும் 14 வயது சிறுமி கேடிசி குட்சன். இந்த சிறுமி கர்ப்பமாக இருந்து வந்தாள். ஆனால் இதுபற்றி தனது பெற்றோருக்கோ, மற்ற யாருக்குகோ தெரியாமல்
மறைத்து வந்தாள்.
மறைத்து வந்தாள்.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி திடீரென குட்சனுக்கு பிரசவவலி ஏற்பட்டது. அவள் கழிவறைக்குள் சென்று தனது வாயில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். பிறகு அந்த விஷயத்தை மூடி மறைக்க அந்த குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்று ஒரு சிறிய காலணி பெட்டிக்குள் திணித்து, மறைத்து வைத்தாள்.
சில நாட்களுக்கு பின் அவளது தாயார் தெரசா குட்சன் வீட்டை சுத்தம் செய்தார். அப்போது அழுக்குத் துணிகளை சந்தேகத்துடன் எடுத்துப்பார்த்தார். அதில் இறந்துபோன ஒரு பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து தெரசா குட்சன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அங்கு விரைந்து வந்த போலீசார் கேடிசிகுட்சனை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவள், தான் சவுண்டா கிளாஸ் பொம்மையைச் கொண்டு அந்த குழந்தையை கொன்றது எப்படி என விளக்கி செய்து காட்டினாள்.
மேலும் தன் கர்ப்பத்தை மறைக்க அவர் லூசான பேன்ட், சட்டை அணிந்து வந்ததாகவும், தன் பெற்றோர், தான் உடல் எடை அதிகரித்து வருவதாகவும், உடல் பயிற்சி செய்யவும் அறிவுறுத்தினர் எனவும் தெரிவித்தார்.
விசாரணைக்குப்பின் இது திட்டமிட்ட கொலை என போலீசார் தெரிவித்தனர். தனது 18 ஆண்டு கால பணியில் இதுபோன்ற நெஞ்சை உலுக்கிய சம்பவத்தை பார்த்ததில்லை என ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.
.
0 கருத்து:
கருத்துரையிடுக