யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள யாழ் விழிப்புலன் அற்றோரின் தொழில்பூங்காவில் சாகித்தியன் இசைக்குழு கடந்த பல வருடங்களாக இயங்கி வருகின்றது.
பல நிகழ்வுகளில் பக்க வாத்தியமின்றியே பார்ப்போரை தம் வசம் ஈர்க்கும் அற்புத குரல்வளம் கொண்ட பாடகர்களை இவ் இசைக்குழு கொண்டிருந்தாலும் சரியான சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு கிடைக்காமையினாலோ அல்லது மறுக்கப்படுவதனாலோ மட்டுமன்றி சொந்தமாக பக்கவாத்திய கருவிகள் இல்லாமையும் இவ் இசைக்குழுவின் வளர்ச்சிக்கு பெரும்தடையாக அமைந்துள்ளது.
ஓர்கன் மற்றும் ஏனைய வாத்திய கருவிகளை வாடகைக்கு பெற்றே இவ்வாறான இசைக்குழுவை நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது
0 கருத்து:
கருத்துரையிடுக