புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


துருக்கி இளைஞர் தன்னிடம் கோபித்துக்கொண்டு பிரிந்து சென்ற தன் மனைவியைப் பார்க்க. அவளது தாய் வீட்டிற்கு வந்த கணவர், அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதால் தனது கைத்துப்பாக்கியை எடுத்து மாமனார், மாமியார், மனைவி ஆகிய மூவரையும் துப்பாக்கியால்
சுட்டார்.துருக்கி நாட்டிலிருந்து வந்து பேசெலில் குடியிருக்கும் குடும்பத்தினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் உயிர் ஊசலாடுகிறது.

மாமனார் மரணமடைந்தார். இவர்களைச் சுட்டவர். 25 வயது துருக்கி இளைஞர் தன்னிடம் கோபித்துக்கொண்டு பிரிந்து சென்ற மனைவியைப் பார்க்க அவரது வீட்டுக்குப் போனார்.

அப்போது தனது மகளைப் பார்க்க அவளது பெற்றோரும் அங்கு வந்திருந்தனர். குடும்பப் பிரச்னை முற்றியதால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.துப்பாக்கியால் சுட்டவரின் மனைவியும்(வயது 31) மாமியாரும்(வயது 58) படுகாயமுற்றனர். மாமனாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பொலிசார் சுட்டவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top