புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்றைய காலத்தில் பி.பி எனப்படும் இரத்த அழுத்தத்தினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வயதானவர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது இளம் வயதினரும் அதிகமாக இந்த பிரச்சனைக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவை அனைத்திற்கும் காரணம் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் போன்றவைகளே ஆகும். இத்தகைய மாற்றங்கள் வருவதற்கு, வெளிநாட்டில் இதுவரை பின்பற்றி வந்தவைகள்,   ஃபேஷன் என்ற பெயரில் அனைவரின் மனதிலும் பதிந்து, இன்று இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுள்ளன. என்ன தான் மாற்றங்கள் வந்தாலும், அதை அப்படியே நாம் பின்பற்றி வேண்டியதில்லை. இருப்பினும், அவற்றை பின்பற்றி, இப்போது வருந்துவதில் பலனில்லை.

இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், மற்ற நோய்களை நாம் தேடிப் போக வேண்டியதில்லை, அவை தானாகவே நம் உடலுக்கு வந்துவிடும். அதிலும் குறிப்பாக இதய நோய். எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமலிக்க, மருந்துகளை எடுத்துக் கொள்ளாமலேயே, இயற்கை முறையில் ஒருசிலவற்றை செய்தாலே, இரத்த அழுத்தத்தைக் குறைத்துவிடலாம். அது என்னவென்று பார்ப்போமா!!!

மனஅழுத்தம்: மன அழுத்தம் மற்றும் இறுக்கம் கூட இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே மன அழுத்தம் ஏற்பட்டால், சிறிது நேரம் எதனால் இது ஏற்படுகிறது என்று யோசித்து பார்க்க வேண்டும். அவ்வாறு யோசிக்கும் போது எதனால் ஏற்படுகிறது என்று தெரியும் போது, அதனை எப்படி சரிசெய்து மனஅழுத்தத்தை குறைக்கலாம் என்று சிந்திக்க வேண்டும். சொல்லப்போனால், மன அழுத்தம் ஏற்பட்டாலே மூச்சை உள் வாங்கி, வெளிவிடுதல், யோகா, தியானம் போன்றவற்றை செய்தால், மனமானது சற்று ரிலாக்ஸ் ஆகும்.

உடல் எடை: இரத்த அழுத்தம் உடல் எடையைப் பொறுத்தது. உடல் எடை அதிகமானால், இரத்த அழுத்தமும் அதிகமாகும். ஆகவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி:  தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால், இரத்த அழுத்தம் குறையும். நேரமில்லையெனில் 10 நிமிடமாவது செய்ய வேண்டும். அதை விட்டு, எப்போது செய்தாலும் ஒன்று தானே என்று வார இறுதியில் கடுமையான முறையில் உடற்பயிற்சி செய்தால், அதனால் உயிருக்கு பாதிப்பு தான் ஏற்படும். எனவே எந்த ஒரு செயலையும் அவசரமாக ஒரே நேரத்தில் செய்வதை தவிர்த்து, பொறுமையாக செய்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இரத்த அழுத்தமும் குறையும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top