புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிங்கப்பூர், மத்திய செரங்கூன் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும், ஒன்பது பிரம்படி மற்றும்
ஆயிரம் சிங்கப்பூர் டொலர் அபராதம் செலுத்த வேண்டுமென தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கடந்த நவம்பர் மாதம் 24ம் திகதி இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ரூப்பசிங்க ஆரச்சிகே அனில் பெரேரா ( 37 வயது) என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய செரங்கூனில் உள்ள தேநீர் கடையொன்றுக்கு சென்ற 47 வயதுடைய பெண்ணை வழிமறித்து, வன்புணர்வுக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக குறித்த பெண் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவே நீதிமன்றம் குறித்த தண்டனையை விதித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top