புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருவல்லிக்கேணியில் உள்ள பச்சையப்பன் தெருவில் மணி என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவி பெயர் பத்மாவதி. இவர்களுக்கு யுவராஜ் என்ற மகன் உள்ளார்.


பத்மாவதி, யுவராஜ் ஆகிய இருவரும் 14.12.2012 மாலை மண- பகுதியில் ஏதையோ எரிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில்,

13.12.2012 அன்று இரவு மணியை துண்டு துண்டாக வெட்டி தலையையும் ஒரு கையையும் எடுத்துக்கொண்டு சென்று எரித்துவிட்டனர். மற்ற பாகங்களை எரிப்பதற்காக வந்தபோது சிக்கிவிட்டனர் என்பது தெரியவந்தது. மேலும் சில பாகங்களை வீட்டில் பையில் வைத்துள்ளதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் பத்மாவதி கூறியதாவது, எனது கணவர் காமவெறி பிடித்தவர். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த அவர் அங்கு ஏதோ பிரச்சனையில் சிக்கியதால் வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் எனக்கு கோபம் வந்தது. சுத்தியால் தலையில் அடித்தேன் அப்போது அவர் உயிரிழந்துவிட்டார். பின்னர் எனது மகனோடு சேர்ந்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி எரிக்க முயற்சி செய்தபோது மாட்டிக்கொண்டேன் என்று பத்மாவதி தெரிவித்தாக போலீசார் கூறினர்.

போலீசார் தாய், மகன் இருவரையும் கைது செய்து திருவல்லிக்கேணியில் உள்ள அவர்களது வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்ட மணியின் உடலை வைத்திருந்த பைகளை எடுத்துக்கொண்டு சென்றது. சம்பவம் எப்படி நடந்தது என்றும் விசாரணை மேற்கொண்டனர்.





இந்த கொலை சம்பவம் திருவல்லிக்கேணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top