புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



செய்யூரை அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 45). இவரது மனைவி தனலட்சுமி (40), இவர்களது மகள் கடந்த 10-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.


இதனால் அவமானம் அடைந்த கணவன்- மனைவி இருவரும் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்தனர். நேற்று காலை ரவியும், தனலட்சுமியும் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தொங்கினர்.

அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு செய்யூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே தனலட்சுமி பரிதாபமாக இறந்தார். ரவி, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செய்யூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top