விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், 1.25 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச எஸ்.எர்ராமில்லி(வயது 45). அமெரிக்காவில்
வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்தாண்டு ஜூன் மாதம் வாஷிங்டனில் இருந்து சிகாகோ செல்லும் விமானத்தில் கடைசி பயணியாக ஏறினார்.
ஒரேயொரு இருக்கை மட்டுமே காலியாக இருந்தது, மூன்று பேர் அமரும் அந்த இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் மனைவியும், மற்றொரு ஓரத்தில் அப்பெண்ணின் கணவரும் அமர்ந்திருந்தவர். நடுவில் ஒரே ஒரு இடம் மட்டும் காலியாக இருந்தது.
இருவருக்கும் இடையில் அமர்ந்து கொண்டு, தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தனது சில்மிஷ வேலையை காட்டியுள்ளார்.
தூக்க கலக்கத்தில் இருந்த அந்தப் பெண், தன் கணவர் தான் இப்படி செய்கிறார் என எண்ணி விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல் தூங்கிக் கொண்டிருந்தார். தற்செயலாக கண் விழித்தபோது, மற்றொரு நபர் என அறிந்து சத்தம் போட்டார்.
உடனே விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் விழித்து விட்டனர். அதன் பின் விமானம் தரையிறங்கியதும், பொலிசில் அந்தப் பெண் புகார் அளித்தார்.
அதன் படி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட எர்ராமில்லி பின் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எர்ராமில்லிக்கு 2 ஆண்டு சிறையும், 1.25 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, எர்ராமில்லியால் இதற்கு முன் பாதிக்கப்பட்ட இரு பெண்களும் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக