புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கோவை மாவட்டம், அன்னூர் அருகே குடும்பத் தகராறில் கத்தியால் குத்திக் கொண்ட கணவன், மனைவி இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராதா (25). அவரது கணவர் தேனியைச் சேர்ந்த முத்துக்காமாட்சி (30). இருவரும் திண்டுக்கல்லில் ஒன்றாகப் பணியாற்றிய போது காதலித்து, ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பிறகு அன்னூர் அருகே ஆயிம்மாபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கத்தை விட இருவரது சத்தமும் அதிகமாக இருந்துள்ளது.

அதைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது, இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

அவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முத்துகாமாட்சி கோவை அரசு மருத்துவமனையிலும், ராதா தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அன்னூர் போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top