ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மக்கள்தொகையும் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளின் பொருளாதாரம் அதிகளவு வீழ்ச்சி அடைந்துள்ளதால், மக்கள்
ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வருவது அதிகரித்துள்ளது.
ஜேர்மனியின் நிலையான பொருளாதாரமும், ஆட்பற்றாக்குறையும் புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு தக்க சூழலை அமைத்து தருகிறது.
மேலும் ஜேர்மானியர்களின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால், வெளிநாட்டவர்களின் வருகை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
எனவே எதிர்வரும் 2014ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 506,000 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக