புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தின் டிவி நிகழ்ச்சி அமைப்பாளர் மறைந்த ஜிம்மி சவிலி, சிறுவர்கள் உள்பட 214 பேரிடம் செக்ஸ் லீலை நடத்தியதாக போலீசார் திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டுள்ளனர். இங்கிலாந்தின்
லீட்ஸ் பகுதியில் கடந்த 1926ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பிறந்தவர் ஜேம்ஸ் வில்சன் வின்சென்ட். வாலிப வயதில் பாப் பாடகராகவும், நடன நிகழ்ச்சிகளை அமைப்பவராகவும் பிரபலமானார்.

ஜிம்மி சவிலி என்று அன்பாக அழைக்கப்பட்டார். இவர் பிபிசி உள்பட டிவிக்களில் Ôஜிம் 2 பிக்ஸ் இட்Õ, Ôடாப் ஆப் தி பாப்ஸ்Õ போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரது நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன. கடந்த 1970களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருடைய நிகழ்ச்சிகளுக்காக ஏங்கிய காலம் உண்டு. டிவி நிகழ்ச்சி மட்டுமன்றி அறக்கட்டளைகளுக்காக கோடிக்கணக்கான நிதியும் திரட்டி தந்தார்.

இதனால் மக்களிடம் செல்வாக்குடன் திகழ்ந்தார். இவரை பாராட்டி ராணி எலிசபெத் கடந்த 1980ல் விருது வழங்கினார். முன்னாள் பிரதமர் மார்க்கரெட் தாட்சர் விருந்தளித்தார். இவரது சேவையை பாராட்டி போப் கவுரவித்தார். இவ்வளவு புகழ் பெற்ற ஜிம்மி சவிலி, கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி தனது 84வது வயதில் காலமானார்.

இவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னர், பல்வேறு செக்ஸ் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். ஜிம்மி இறந்த பின்னர் பலர் தைரியமாக புகார் அளித்தனர். இதுவரை 450 பேர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசாரும் சிறுவர்கள் அறக்கட்டளையும் இணைந்து தீவிர விசாரணை நடத்தின. இதன் கூட்டறிக்கையை போலீசார் நேற்று வெளியிட்டனர்.

அதில் கூறியிருப்பதாவது: மிகவும் மதிக்கப்பட்ட பிரபலமான ஜிம்மி சவிலி, 214 செக்ஸ் கிரைம்களில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் உள்பட 34 பாலியல் பலாத்காரமும் அடங்கும்.

இவருடைய லீலைகள் கடந்த 1955ம் ஆண்டு மான்செஸ்டரில் தொடங்கி உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு கடைசியாக இவர் செக்ஸ் கிரைமில் ஈடுபட்டுள்ளார். பிபிசியில் பணியாற்றிய போதும், நோயாளிகளுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி, மருத்துவமனை என்று எங்கெல்லாம் அவர் சென்றாரோ, அங்கெல்லாம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 60 ஆண்டுகளாக இவர் பலரை சீரழித்துள்ளது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவமானத்துக்கு அஞ்சி பலர் புகார் தெரிவிக்காமலே உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top