கிளிநொச்சியில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி ஜெயந்தி நகரில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணபதி செல்வரத்தினம் (வயது 49) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அதே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த நபரின் வீட்டினுள் புகுந்த சிலர் அவர்கள் மீது தடிகளாலும் கம்பிகளாலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த நபரை கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்படுகாயமடைந்த இரு பெண்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக