புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டொரொண்ட்டோ மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக் கூட்டத்தில் பெண் நோயாளிகளிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மருத்துவர் ஜார்ஜ் டூட்னாட்(வயது 64) மீது 21 குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன. இவர் கடந்த 2006
முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 25 வயது முதல் 75 வயது வரையிலான பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வழக்குப் பதிவாகியுள்ளது.

இவர் தான் மயக்கமருந்து கொடுக்க வேண்டிய பெண் நோயாளிகளுக்கு மருந்து கொடுத்த பின்பு அவர்கள் அரைகுறையாக மயங்கியிருந்த வேளையில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது அவர்களிடம் தவறாக நடந்திருக்கிறார்.

2010ம் ஆண்டில், ஒரு பெண் நோயாளிக்கு கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தபோது அவர் இந்த மருத்துவர் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், தன் வாய், மார்பு போன்ற பகுதியை அசிங்கப்படுத்தியதாகவும் முறையிட்டார்.

இவரது அரைகுறை மயக்கம் தெளிந்ததும் இவர் டூட்நாட் மீது பொலிசில் புகார் செய்தார்.

பொலிசார் இவரைக் கைது செய்தனர். இச்செய்தி கேட்ட பின்பு பலரும் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இந்நிலையில் ஒண்ட்டேரியோ உச்சநீதிமன்றத்தில் நீதிபதி டேவிட் மெக் கோம்ப்ஸ் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

அப்போது தன் குற்றச்சாட்டை இவர் மறுத்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top