புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டது.


பேரவையின் நிறுவனரும், கவிஞருமான வைரமுத்து அதில் கலந்து கொண்டு பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பேசினார்.

இங்கு அவர் கூறியதாவது...

இந்திய அரசு தேசிய அடையாளங்களாக சிலவற்றை காத்து வருகிறது. ஆனால், தேசிய நூல் என்ற ஓர் அடையாளம் இன்று வரை உருவாக்கப்படவில்லை.

இனம் கடந்து, மொழி கடந்து, இடம் கடந்து உலகப் பொதுமறையாகத் திகழும் திருக்குறள் தான் தேசிய நூலாகத் திகழமுடியும் என்று தமிழர்கள் நம்புகிறோம். எனவே, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுகிறோம்.

ஒரு கருத்து நூறு ஆண்டுகள் நீடிப்பதே அரிது. அதுவும் இரு நூறு ஆண்டுகள் நீடிப்பது அரிதினும் அரிது. ஆனால், ஒரு தமிழன் சொன்ன கருத்து ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நீடித்து உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைத்து நிற்கிறது.

அது தமிழனின் பெருமை. திருக்குறளை அனைவரும் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும். திருக்குறளைப் பாதுகாப்பது என்பது அதை ஓதுவது மட்டும் அல்ல, உணர்வது மற்றும் வாழ்வது.

இதுதான் திருவள்ளுவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் என்றார் வைரமுத்து.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top