பிரிட்டனில் இரட்டையராக பிறந்த இரு பெண்கள், தங்களைப் போலவே இரட்டையராக பிறந்த இரு ஆண்களை திருமணம் செய்து, அவர்களில் ஒரு தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தையாக பிறந்த
அதிசயம் ஒன்று நடந்துள்ளது.
பிரிட்டனில் Darlene and Diane Nettemeier என்ற இரண்டு இளம்பெண்கள் இரட்டையர்கள். இவர்கள் 1998ல் Twinsburg, Ohio, என்ற இடத்தில் இரட்டையர்களுக்காக நடந்த ஒரு விழாவில் Mark and Craig என்ற இரட்டையர்களாக பிறந்த வாலிபர்களை சந்தித்து, காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் திருமணத்திற்கு பின்பு பிரியாமல் அருகருகே இரண்டு வீடுகள் கட்டி அதில் இணைபிரியாமல் சந்தோஷ வாழ்க்கை நடத்தினர். இவர்களில் Diane and Craig என்ற தம்பதிகளுக்க் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் இரட்டை சந்தோஷம் அடைந்தனர். மேலும் இந்த இரண்டு தம்பதிகளுக்கு சேர்ந்து மொத்தம் ஐந்து குழந்தைகள் உள்ளனர். எல்லோரும் ஒரு கூட்டுக்குடும்பம் போல ஒன்றாக வாழ்ந்து வருவதை அந்த ஊர் மக்களே கண்டு அதிசயித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக