புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவிட்சர்லாந்தில் புகலிடம் நாடிவருவோருக்கு அரசு அதிக ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.நிதிநிலை கட்டுப்பாடு இருந்தபோதும் அதிகாரிகள் கூடுதலாக செலவழிக்க ஆவலாக இருக்கின்றனர்.


கடந்த வருட நிதிநிலை அறிக்கையில் 2013ம் ஆண்டில் 23000 பேருக்கு மட்டும் புகலிடம் அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

ஆனால் இந்த வருடம் புகலிடம் தேடி வருவோரின் எண்ணிக்கை முப்பதாயிரமாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

மூன்றாண்டு நிதிநிலைத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட தொகையை விட 100 மில்லியன் ஃபிராங்க் அதிகமாக செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அரசியல் அகதிகளுக்காகும் செலவு 1.43 பில்லியன் ஃபிராங்க் ஆகலாம் என்று கார்ல் ஷ்வார் தெரிவித்தார்.

கடந்த 1999க்குப் பின்பு இந்தத் தொகையே அரசு புகலிடம் நாடுவோருக்குச் செலவழிக்கும் அதிகப்பட்சத் தொகையாகும்.

ஜெனீவாவில் உள்ள ஐநா அகதிகள் முகாம், சிரியாவில் போர் நடப்பதால் அங்கிருந்தும் அகதிகள் வரத்தொடங்கி உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியது.

ஐநாவின் மனித உரிமை ஆணையம் கடந்த மாதம் சிரியாவிலிருந்து வடக்கு ஆப்பிரிக்காவுக்கும் அண்டை நாடுகளுக்கும் சென்ற அகதிகள் 100000 முதல் 600000 பேர் ஆவர் என்று தெரிவித்துள்ளது.

சிரியாவில் போர் தொடர்ந்தால் அடுத்த ஜுனுக்குள் 1.1 மில்லியன் பேர் அகதிகளாக வெளியேறி வருவர் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மாலியில் நடைபெறும் பிரச்னையால் அந்த நாட்டைவிட்டு சுமார் 150000 பேர் வெளியேறியிருப்பதாக ஐநாவின் மனிதஉரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அகதிகளின் எண்ணிக்கை பெருகிவருவதால் சுவிட்சர்லாந்து அரசு அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top