செம்பருத்தியில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு திரையுலகை, ஒரு கலக்கு கலக்கிய நடிகை ரோஜா, சினிமாவை தொடர்ந்து, அரசியலிலும், தன் காலடியை அழுத்தமாக பதித்துள்ளார்.
இதன் பலன் ஆந்திராவில் தவிர்க்க முடியாத அரசியல்வாதியாகி விட்டார். ஆனாலும், சினிமா இரசிகர்களை அவர் மறந்துவிடவில்லை.
தமிழ், தெலுங்கில் சில படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் அவர், "அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில், கதாநாயகி கார்த்திகாவின் அம்மாவாக கமிட்டாகி, ஏதோ காரணங்களால், பின் அப்படத்தில் நடிக்கவில்லை.
இதையடுத்து ரோஜா, அம்மா வேடத்தில் நடித்துள்ள "வில்லாதி என்ற படம், தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.
இப்படத்தில், ரோஜாவுக்கு அம்மா வேடம் என்றாலும் கதைப்படி வில்லியாக, அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளாராம் ரோஜா.
0 கருத்து:
கருத்துரையிடுக