புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் மச்சி கிராமத்தைச் சேர்ந்த மாணவி அருகில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாள். அவள் தினமும் கல்லூரிக்கு செல்லும் போதும், வரும் போதும் அதே
ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கிண்டல்-கேலி செய்து வந்தார். அவரை காதலிப்பதாகவும் வாலிபர் கூறினார்.

இதை ஏற்க மாணவி மறுத்து விட்டார். என்றாலும் வாலிபரின் கிண்டல்-கேலி தொடர்ந்ததால் மாணவி எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டு திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் திடீர் என்று கத்தியால் மாணவியின் மூக்கை அறுத்து மானபங்கம் செய்தார்.


இதில் மாணவியின் மூக்கு அறுபட்டு ரத்தம் கொட்டியது. உடனே வாலிபர் ஓடிவிட்டார். இதைப்பார்த்த பொதுமக்கள் மாணவியை மீட்டு கோரக்பூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட வாலிபரரை கைது செய்தனர்.


இதற்கிடையே உ.பி.யில் கற்பழிப்பு முயற்சியில் பெண் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் அலகாபாத் மாவட்டத்தில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


உ.பி.யில் சில நாட்களுக்கு முன்பு ஹத்ராஸ் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் இளம்பெண் உயிரோடு எரிக்கப்பட்டாள். ஆபத்தான நிலையில் இருந்த அவள் ஆஸ்பத்திரியல் சிகிச்சை பலனின்றி இறந்தார். உத்தர பிரதேசத்தில் இந்த புத்தாண்டில் மட்டும் 23 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 3 பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top