சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. அதற்கு நம்முள் ஏற்படும் தேவையற்ற
சிந்தனைகளான தூண்டுதல்களை தவிர்ப்பது நல்லது. இல்லையேல் அது நம்மை பெரும் பிரச்சனைகளுக்கு உள்ளாக்கும். ஆனால் கல்யாண வாழ்கைக்குள் நுழைந்தபின், கடந்த காதல் வாழ்கையை மறப்பது மிகவும் நல்லது. இதனால் எத்தனையோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம்.
ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்பு கொள்ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டு கொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திருமணமான ஆண், பெண் இருவரும் சில நிபந்தனைகளை அவரவர்களுக்கென கடைபிடித்தால், அது சுகமான மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழ வழிவகுக்கும். இப்போது எப்படிப்பட்ட நிபந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போமா!!!
1. அவரவர்களுக்கென சில விருப்பங்கள் இருக்கும். அதை சிலரிடம் பார்க்கும் போது ஈர்ப்பு ஏற்படும். அதை உங்கள் உணர்வுகள் தூண்ட செய்யும். இது எல்லோருக்கும் உள்ள ஒரு சாதாரண உணர்வு. ஆனால் அதை நாம் திருமணமான பின்னும் தொடர்ந்தால், அதை கள்ளக்காதல் என்று பெயரிடுவர். ஆகவே அந்த வாய்ப்பை நாம் கொடுக்காமல், "எத்தனை விபரிதங்கள் வரும்?" என்பதை நாம் உணர்ந்தால், அதில் இருந்து எளிதில் விடை பெறலாம்.
2. எண்ணங்கள் மட்டுமே நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், மற்றொரு நபருடன் இருப்பது போன்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.
3. தன் மீது ஆண்கள் ஆசை கொள்ளும்படி நடந்து கொள்ளும் பெண்ணாகவோ அல்லது அவர்கள் மயங்கும்படி நடந்து கொள்வதையோ தவிர்க்க வேண்டும்.
4. அனைவருக்கும் காதல் ஈர்ப்பு மற்றும் ஆசை இருக்கும். அதனால், ஆபத்தை உருவாக்கும் சூழல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. உதாரணமாக, எதிர் பாலின நண்பருடன் தனியாக மதிய உணவு என்று உணவகம் செல்வது, இல்லையேல் வீட்டில் தனியாக இருக்கையில், உங்கள் கணவன் அல்லது மனைவி வேலைக்கு சென்றிருக்கும் சமயம் அவர்களை வீட்டிற்குள் அனுமதிப்பது போன்ற செயல்களை அனுமதிக்க வேண்டாம்.
5. எதிர் பாலின நண்பர்களுடன் சொந்த மற்றும் முக்கியமான பிரச்சினைகளை பற்றி விவாதிக்க வேண்டாம். உதாரணமாக, கணவன் அல்லது மனைவியுடன் உள்ள பாலியல் பிரச்சனைகளை பற்றி பேசுவது பெரும் விபரீதங்களை உண்டாக்கும்.
6. எதிர் பாலின நண்பர்களுடன் நட்புறவு கொள்வது. உதாரணமாக, மனைவி கணவரிடமோ அல்லது கணவன் மனைவியிடமோ, எதிர் பாலின நண்பர்களுடன் நட்பை வைத்திருப்பது பிடிக்கவில்லை என்று சொல்லும் போது, "அவர் என் நண்பர்." என்று சொல்லி அவருடன் நட்பை தொடர்வதால் வீட்டிற்குள் பிரச்சினைகள் தொடரும். இந்த மாதிரி பிரச்சனை வந்தால், அப்போது கணவன் /மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா? என்று நன்கு யோசித்து செயல்பட்டால், ஒரு நல்ல தீர்வுக்கு வந்துவிடும்.
7. எப்போதும் வாழ்க்கை துணையிடம் பொறுப்புடன் நடந்து கொள்வதினாலும் மற்றும் உங்கள் நட்பை பற்றி மனம் திறந்து பேசுவதாலும், இல்வாழ்கையானது சந்தோசமாக இருக்கும்.
8. ஆலோசனை கொடுக்கும் மற்றும் நலம் விரும்பியாக இருப்பவரிடம், குடும்ப வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதால், இல்வாழ்க்கை பலமடையும். மேலும் அவர்களின் ஆதரவு உங்களை ஊக்குவிக்கும். அதிலும், எதிர் பாலின நண்பர்களாக இருந்தால், அவர்களுடன் பழகும் போது, அவர்களுடைய நடவடிக்கையானது மனதிற்கு பிடிக்க வரும் போது, அது காதலாக மாறும். அதனால் நட்பை கலங்க விடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.
எனவே திருமண வாழ்க்கைக்கு எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, "எப்பொழுதும் நம் கணவன், நம் குழந்தை" என்ற சிந்தனையை மனதில் கொண்டால், வாழ்க்கையானது சந்தோஷத்துடன், சுகமாக இருக்கும். என்ன நண்பர்களே சரிதானே?
0 கருத்து:
கருத்துரையிடுக