பாகிஸ்தானில் மதகுரு காத்ரி தலைமையில் அரபுநாடுகள் பாணியிலான போராட்டம் நடைபெறுகிறது.
பாகிஸ்தானின் அவாமி தெஹ்ரிக் கட்சியின் தலைவரான தஹீர்- காத்ரி கடந்த மாதம்தான் கனடாவில் இருந்து இஸ்லாமாபாத் திரும்பியிருந்தார்.
கடந்த சில நாட்களாக ஊழல் அதிகரித்து வருவதால் அரசாங்கம் பதவி விலகியாக வேண்டும், நாடாளுமன்றத்தை உடனே கலைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காத்ரியும், அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ராப், நீர்வளத்துறை அமைச்சராக இருந்த போது ஊழலில் ஈடுபட்டார் என்ற புகாரின் பேரில் கைது செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காத்ரியின் போராடங்களுக்குப் பின்னணியில் இராணுவம் இருக்கிறது என்றே கூறப்படுகிறது.
பிரதமர் அஷ்ரப்பின் உதவியாளர் பவத் சவுத்திரி ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், காத்ரி நடத்தும் போராட்டத்துக்கும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் தொடர்பு இருக்கிறது.
இதன் பின்னணியில் இராணுவம் இருக்கிறது. ஆட்சியை கைப்பற்ற இராணுவ அதிகாரிகள் ஆசைப்படுகின்றனர் என்றார்.
ஆனால் இராணுவ தலைமை தளபதி கயானியோ, அரசியலில் இருந்து இராணுவம் விலகியே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் அடுத்து என்ன நடக்கும்? என்ற பரபரப்பான கொந்தளிப்பு சூழ்நிலை நிலவுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக