செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து நாசா பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பப்பட்டது.
அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் விண்கலம், தற்போது துளையிடும் ஆராய்ச்சிக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான திட்ட வரைவு தயாராக இருப்பதாகவும், துளையிடுவதற்கான இடத்தை தெரிவு செய்துவிட்டதாகவும் திட்ட மேலாளர் ரிச்சர்ட் குக் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில நாட்களில், அந்த இடத்திற்கு சென்று சேர்ந்த பிறகு இரு வார காலத்தில் இந்த துளையிடும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு மறைந்த துணை மேலாளர் ஜான் கிளீனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக