இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், பேராண்மை படத்திற்கு பின் தனது அடுத்த படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்.
இரண்டு பெரிய கதாநாயகர்களை வைத்து எடுக்கப்படவுள்ள தனது புதிய திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்களை மார்ச் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளாராம் ஜனநாதன்.
தனது ´பேராண்மை´ நாயகன் ஜெயம் ரவியை தனது புதிய திரைப்படத்துக்கான இரு கதாநாயகர்களில் ஒருவராக தெரிவு செய்துள்ளார்.
அடுத்த கதாநாயகன் தெரிவில் இடம்பெற்றுள்ளவர் ஜீவா என தெரிவிக்கப்படுகின்றது.
ஆகமொத்தத்தில், ரவியும் ஜீவாவும் இணையும் திரைப்படமாக ஜனநாதனின் புதிய திரைப்படம் அமையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, இவர்களை வைத்து ஜனநாதன் எடுக்கப்போகும் திரைப்படத்தின் பெயர் தான் விசேடத்துவமானது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
´தூக்குத் தண்டனை´ என்பதே அவர் தனது புதிய திரைப்படத்துக்கு வைத்துள்ள பெயராகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக