புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புற்றுநோயை குணப்படுத்தும் மூலக்கூறை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயிர்கொல்லி நோயான புற்றுநோயால், ஆண்டுதோறும் ஏராளமானோர் இறக்கின்றனர். இந்த நோய்க்கு தற்போது அளிக்கப்படும்
சிகிச்சைகள் பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

இந்தநோயை குணப்படுத்துவதற்கான மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் டாக்டர் சதீஷ் சி ராகவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டு வருகிறது.

அதில், புற்றுநோயை குணப்படுத்துவதற்கான புதிய மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் இந்நோயை குணப்படுத்துவற்கான புதிய மருந்துகளை தயாரிப்பதில் இந்த மூலக்கூறு புரட்சியை ஏற்படுத்தும் என்று இக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மூலக்கூறுக்கு சதீஷ் அஸ் எஸ்சிஆர்-7 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது பற்றி சதீஷ் அளித்த பேட்டியில்....

புற்றுநோய்க்கு இப்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில், இந்த மூலக்கூறு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புற்றுநோய் சிகிச்சையில் இந்த மூலக்கூறு கண்டுபிடிப்பு ஒரு மைல்கல் என்று கூட கூறலாம்.

கட்டியால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு இந்த மூலக்கூறை செலுத்தி பரிசோதனை செய்ததில், கட்டிகளின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, எலிகளின் வாழ்நாள் அதிகரிப்பது உறுதியானது என்றார்.

இவர், கேரளாவில் உள்ள கன்னூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top