புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஓரினச் சேர்க்கை தொடர்பால் தமிழகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தமிழகத்தின், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த தோக்கவாடி பஞ்சாயத்து, மலப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ், வயது 27.

திருமணமாகாதா இவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட தனது தாயார் நல்லம்மாளுடன், வசித்து வந்தார். இவருக்கு, தந்தை வழி சொத்தாக சுமார் எட்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

கடந்த, 22-ம் திகதி அதிகாலை, விவசாயி செல்வராஜ், தலையில் கல்லைபோட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், தனது தோட்டத்தில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து பொலிஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். செல்வராஜ் கொலை சொத்துக்காக நடந்ததா..? அல்லது வேறு ஏதாவது காரணமா ? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இதுதொடர்பாக செல்வராஜின் கையடக்கத் தொலைபேசியில் பேசியவர்களின் விபரங்களை வைத்து, பொலிஸார் தங்களது விசாரணையை நடத்தினர்.

அப்போது, செல்வராஜ், தனது அத்தை மகன் கந்தசாமியுடன், அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கந்தசாமியை, பொலிஸார் விசாரிப்பதற்காக அழைத்தனர். இந்தநிலையில் போலிஸ் தன்னை தேடுவதை அறிந்த கந்தசாமி, திடீரென தலைமறைவானார்.

நேற்று காலை, பொலிஸில் கந்தசாமி சரணடைந்தார். அவர், பள்ளிபாளையம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின்னர் கந்தசாமியிடம், பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், செல்வராஜூக்கும், கந்தசாமிக்கும், "ஹோமோ செக்ஸ்´ (ஓரினச் சேர்க்கை) வழக்கம் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த, 21-ம் திகதி இரவு கந்தசாமியை ஃபோனில் தொடர்பு கொண்ட செல்வராஜ் வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார்.

செல்வராஜ் அழைத்த இடத்துக்கு கந்தசாமி சென்றுள்ளார். அப்போது, வழக்கம் போல கந்தசாமியை, செல்வராஜ் ஹோமோ செக்ஸுக்கு வற்புறுத்தியுள்ளார். அதற்கு கந்தசாமி மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் பிரச்சினை ஏற்ப்பட்டுள்ளது.

தொடர்ந்து செல்வராஜிடம் இந்த ஹோமோ செக்ஸ்சிலிருந்து விடுபட நினைத்த கந்தசாமி அருகில் இருந்த கல்லை எடுத்து, செல்வராஜின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, பள்ளிபாளையம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top