புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டம், பஜ்ரங்கர் கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை அதே பகுதியில்


வசிக்கும் சோனு செகாரியா (23), சோனு சென் (20) என்ற வாலிபர்கள் கடந்த 26-ம் தேதி கற்பழித்தனர்.

இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் உன்னைக் கொன்று விடுவோம் என அவர்கள் மிரட்டியும் உள்ளனர்.

இந்த மிரட்டலை பொருட்படுத்தாமல், தனது தாயாருடன் பர்கோடாகிர்ட் போலீஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்து அந்த பெண் புகார் அளித்தார்.

ஆனால், இந்த புகார் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய அந்த இளம்பெண், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

90 சதவீதம் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு நேற்று குணா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கே.சி.ஜேயின், பஜ்ரங்கர் கிராமத்திற்கு சென்று குற்றவாளிகளில் ஒருவனை கைது செய்துள்ளார்.

தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய குவாலியர் சரக போலீஸ் ஐ.ஜி. ஆதர்ஷ் கடியார், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

'இச்சம்பவத்தின் மூலம் கற்பழிப்பு குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய மத்திய பிரதேச மாநில அரசின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது' என அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜய் சிங் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top