பாடசாலை மாணவனொருவனையும் மாணவியையும் கணவன் – மனைவியாக இணைந்து வாழ்வதற்கு ஆதரவு வழங்கிய தந்தையொருரை எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி மாத்தளை நீதவான் நீதிமன்ற நீதிவான் சத்
துரிகா டி சில்வா உத்தரவிட்டார்.
ரத்தோட்ட பிரதேசத்தில் வயது குறைந்த சிறுமியொருத்தியும் சிறுவனும் கணவன் – மனைவியாக குடும்பம் நடத்துவதாக கிடைத்த தகவலொன்றை அடுத்து விசாரணை மேற்கொண்ட ரத்தோட்டை பொலிஸார், இந்த ஜோடியை முறையற்ற வகையில் சேர்ந்து குடும்பம் நடத்த ஆதரவு வழங்கிய சிறுமியின் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மாணவன் பாடசாலை செல்லும் போது மாணவியுடன் காதல் வயப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவருகிறது. மாணவனையும் மாணவியையும் இரட்சண்யசேனை பொறுப்பில் ஒப்படைக்கும்படியும் நீதிவான் உத்தரவிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக