இந்தியாவில் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அருகே மகனை குத்தி கொலை செய்த தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து
கொண்டார்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அருகே கத்திரிபாலாவை சேர்ந்தவர் கண்ணன்(60), கூலித் தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (48). மகன் கிரிதரன் (13), 8ம் வகுப்பு படித்தான்.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வசந்தியின் தாய் மரணம் அடைந்தார். துக்கம் விசாரிக்க சென்ற வசந்தி தாய் வீட்டில் தங்கினார். நேற்று மாலை வீடு திரும்பிய அவர் வீடு பூட்டி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியோடு கதவை உடைத்து திறந்த போது, வீட்டுக்குள் கிரிதரன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையிலும், கண்ணன் தூக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து தந்தை, மகன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கண்ணன் வாழ்க்கையில் வெறுப்படைந்து மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
மகனை கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக