ஜேர்மனியில் கிடைத்துள்ள அவுஸ்திரேலியப் பழங்குடியினரின் மண்டையோடுகளையும், மற்ற எலும்புகளையும் பெரிலினிலுள்ள பல்கலைக்கழக மருத்துவமனை மீண்டும் அந்நாட்டுகே திருப்பியனுப்பிவிட்டது.
இது குறித்து பல்கலைக்கழக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், இந்த எலும்புகளுக்குரியவர்கள் 20ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் இவர்கள் எதற்காக இங்கு வந்தார்கள், எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை.
அதனால் இந்த எலும்புகள் பழங்குடியினரின் பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக அவுஸ்திரேலியாவுக்குத் திருப்பியனுப்பப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக